திங்கள், 13 நவம்பர், 2017

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.


இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

புழுதி பறக்கும் வீதியில்
புயல் வேக ஓட்டம் தினமும்!

சிரிப்பின் சிதறல்கள்
சிந்தாமல் இல்லை தினமும்!

செவிச்செல்வம் தேடி
சென்ற நடைபயணம்  தினமும்!

புத்தகப் பையின் சுமைகள்
புதுவித சுகமாய் தினமும்!

காகித பணம் காணாமல்
காலணா கிடைத்தது தினமும்!

குளம் கிணறு என்று
குளித்த நாட்கள் தினமும்!

விளையாட்டாய் ஒரு விஞ்ஞானம்
வீதியில் காந்தங்களோடு தினமும்!

மிதிவண்டியில் அதிவேக பயணம்
மிதிக்காமல் இல்லை தினமும்!

அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல

அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட
அந்த குழந்தை நாட்கள்
அழைப்பு விடுத்தால் வருமா?

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

குழந்தைகள் தினம் ....


 குழந்தைகள் தினம் ....

பூவிலே சிறந்த பூ உன் சிரிப் பூ
பூவிற் கெல்லாம் நீயே லட்சம் பூ

மொட்டிற் கெல்லாம் மொட்டுப் பூ கமலப் பூ
உன் அழகு கேட்டிடுமே அல்லிப்பூ

உன் இருவிழிகளில் மலரும் பூ என்ன பூ ?
என்னிலே பூத்ததோ தெவிட்டாப் பூ

மென்மைகெல்லாம் மேன்மை உன் சிவப் பூ
உன் புன்னகையில் பூத்தபூ என் வியபபூ

என் கவலை புத்தகம் உன் புன்சிரிப் பூ
என்னிலே பதித்துவிட்டேன் மொழிப் பூ

மொழியிலே சிறந்த பூ என்ன பூ?
உன்னிலே பூத்ததோ உயிர்ப் பூ

உன் அழுகை என் பரிதவிப் பூ
என் அழுகையோ உன் பரிகசிப் பூ

உன் மொழியில் கேட்பேன் இதழ் பூ
என் மொழியில் சிரித்திடும் புகழ் பூ

உன் நடையில் காண்கிறேன் மகிழம் பூ
என் நடையில் பூக்குதே தாழம் பூ

உன்னை கண்டதும் பாடுமே வண்டுப் பூ
என்னைக் கண்டதும் தாவிடுமே செண்டுப் பூ

பூக்களிலே லட்சம் பூ என் அட்சயப் பூ
பூவுக்கே கதை சொல்லுமே உன் மழலைப் பூ