சனி, 28 ஜனவரி, 2017

ஒரு சில நிமிடமாவது என்னை நினைப்பாயா...

காலங்கள் பல காத்திருந்தேன்
உன் காதலுக்காக..

வருடங்கள் பல விழித்திருந்தேன்
உன் வருகைக்காக..

மாதங்கள் பல மலர்ந்திருந்தேன்
உன் சுவாசம் என்னை நேசிப்பதற்காக..

வாரங்கள் பல வலம் வந்தேன்
உன் மனவாசல் கதவு திறப்பதற்காக..

தினமும் நான் ஏங்குகிறேனே..
உனக்காக ஒரு சில நிமிடமாவது என்னை நினைப்பாயா
அன்பே எனக்காக...